♦️பிரபாகரன் மறைவிடத்தில் இருந்து 10,000 வீடியோக்களை எடுத்தோம்! கமல் குணவர்த்த தரும் அதிர்ச்சி தகவல்!

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த ’நந்திக்கடலுக்கான பாதை ‘ எனும் புத்தகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளதாக எமது இணையம் அறிகிறது. குறித்த புத்தகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி, பாதுகாப்புச்செயலாளர் கமல் குணரத்ன பதிவு செய்துள்ளதாவது, பிரபாகரன் அவர்கள் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்கத்தைப் பேணியவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளை அவர் தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த ஒரு சான்றுமே கிடையாது. அவர், ஒரு அன்பான குடும்ப மனிதாரக இருந்தார். பிரபாகரனிடத்திலிருந்தும் அவரது குடும்பத்தினரிடத்திலிருந்தும், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளிலிருந்தும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒளிப்படங்களை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தோம். ஒரு படத்தில் கூட மதுபானக் குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை. அவர் ஒரு ஒழுக்கமான தலைவராகவே இருந்தார். ஷரியத் சட்டத்தை விட மேலான சட்டத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தார் பிரபாகரன். ஒரு திருட்டு நடந்திருந்தால் திருடியவர், ஷரியத் சட்டத்தில் தன் கைகளைத் தான் இழக்க நேரிடும் ஆனால், பிரபாகரனின் சட்டத்தில் வாழ்க்கையை இழப்பார்கள்.
சைவ சமயத்தை பிரபாகரன் ஏற்றிருந்தாலும், கடவுளை அவர் நம்பவில்லை! கடவுள் சக்தி வாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என ஒருமுறை கூறியிருந்தார். அவர் வித்தியாசமான தலைவர்! பலரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் பிரபாகரனிடம் இருந்தது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தனது நூலில் பதிவு செய்துள்ளார்.