பாணி தம்மிக்கவிற்கு போட்டியாக களமிறக்கிய ரித்திகல தேவிந்த லக்ஸிரி ரணசிங்க ! கொரோனா மருந்தாம்…!

கேகாலையில் கொரோனா தொற்று தடுப்பு பானமானது சித்த வைத்தியர் தம்மிக்க பண்டாரக்கவால் தயாரிக்கப்பட்டு அநேகமானோர்க்கு பகிர்ந்தளிக்கப்பட்டது இவரது மருந்தை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் திரண்டு வந்து இறுதியில் பொலிஸாரால் திரத்தியடிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகின.

இந்த நிலையில் இவருக்கு போட்டியாக ரித்திகல தேவிந்த லக்ஸிரி ரணசிங்க என்பவர் கொரோனா தொற்றுக்கான கலவையை உருவாக்கியுள்ளார்.

காளித்தாயின் அருளில் கொரோனா மருந்துப் பாணி தயாரித்ததாக தம்மிக்க பண்டார கிளப்பிய பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த பரபரப்பு இவரால் கிளம்பியுள்ளது

ரித்திகல தேவிந்த லக்ஸிரி ரணசிங்க என்பவர் தயாரித்ததாகக் கூறப்படும் COVID-19 தடுப்பு மருந்து இன்று புதன்கிழமை அரச தொலைக்காட்சியான சுதந்திர தொலைக்காட்சி வலையமைப்பு ஊழியர்களிடையே விநியோகிக்கப்பட்டது.தேவிந்த லக்ஸிரி ரணசிங்க, பண்டைய வேதங்களில் காணப்படும் சமையல் குறிப்புகளின் அடிப்படையில் இந்த கலவையை உருவாக்கியதாகக் கூறியுள்ளார்.