🇫🇷 கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் தற்போதைய நிலவரம்.!!!!

கொரோனா வைரசுக்காக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன அதன்படி வயதுவந்த 18 வயதுக்கு மேல் மக்கள் தொகையில் இதுவரை 57 % வீதமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை மாலை வரையான நிலவரப்படி 30 மில்லியன் பேர் துல்லியமாக 30,159,561 பேர் இதுவரை தங்களது முதலாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 15,405,347 ஆக அதிகரித்துள்ளது இத்தகவலை பிரதமர் Jean Castex அறிவித்துள்ளார்.