🔴 🇫🇷தீயனைப்பு படை மற்றும் இராணுவத்தில் பணிபுரிவோர்க்கு சுகாதார அமைச்சால் விடுத்துள்ள நற் செய்தி…!!!!

இராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தடுப்பூசிகள் போடுவதற்காக மேலதிகமாக சிறப்பு தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார் சுகாதார அமைச்சர் Olivier Véran இன்று திங்கட்கிழமை காலை Epinay-sous-Sénart (Essonne) நகருக்கு பயணமாகியிருந்தார் அங்கு வைத்தே இத்தகவலை சுகாதார அமைச்சர் வெளியிட்டார்.

ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த நிலையங்களில் தடுப்பூசிகள் போடப்படும் எனவும் முதல்கட்டமாக இந்த நிலையங்களூடாக இராணுவத்தினம் மற்றும் தீயணைப்பு படையினர் என மொத்தம் 1.9 மில்லியன் அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.