⚫இலங்கையில் புதிதாக திருமணம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் தம்பதியினருக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் வரும் காணிகள், புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் தம்பதியினருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளரான ஆர்.டி.ரணவக்க தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.