🇫🇷 🔴 தொடருந்தில் பயனிப்பவர்களுக்கு முக்கிய செய்தி….!!!

தொடருந்து பயண கட்டணத்தை குறைக்க செனட் சபையில் நேற்று வாக்கெடுக்கப்பட்டது சுற்றுச்சூழல் மாசைடைவை குறைக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த தொடருந்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டே வாக்கெடுக்கப்பட்டது.

அதில் தொடருந்து பயணச்சிட்டையின் வரியில் 5.5%வீதம் குறைக்கலாம் எனவும் இதனால் பயணத்துக்கான செலவு குறைய மக்கள் பலர் பொதுபோக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்பதால் இந்த முடிவு கொண்டுவரப்பட்டது.

ஆனால் செனட் மேற்சபையில் வலதுசாரியினர் ஆக்கிரமித்திருந்ததால் இந்த வாக்கெடுப்பு வெற்றியில் முடியவில்லை வரியை குறைப்பதால் பயனில்லை என அவர்கள் தரப்பு வாதம் இருந்தது இந்நிலையில் விரைவில் மீண்டும் மற்றுமொரு வாக்கெடுப்பு இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.