🇫🇷பிரான்ஸில் தடைப்படும் தொடருந்து சேவை!

RER B தொடருந்து சேவை பரிசில் இருந்து சாள்-து-கோல் விமான நிலையம் வரை தடைப்பட உள்ளது. இவ்வார இறுதியில் இந்த சேவைத்தடை ஏற்பட உள்ளது. ஜனவரி 30 சனிக்கிழமை, ஜனவரி 31 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் இந்த சேவைகள் தடைப்பட உள்ளன. பாரிய திருத்த வேலைகள் காரணமாக இந்த சேவை தடை ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நிலையங்களுக்கிடையே இரு திசைகளிலும் போக்குவரத்து தடைப்படுகின்றன. எவ்வாறாயினும் between Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) மற்றும் Mitry-Claye நிலையங்களுக்கு RER B பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.