பிரான்சில் தொடருத்து நிலையத்தில் பயங்கரமான அச்சுறுத்தல்.! ஒருவர் கைது.!!!!

தொடருந்து நிலையம் ஒன்றில் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நண்பகல் Côte-d’Or நகரில் உள்ள Montbard தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

பரிசில் இருந்து Dijon நகரை இணைக்கும் அதிவேக தொடருந்தான TGV இல் இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தொடருந்தின் கட்டுப்பாட்டாளரை அவமதிக்கும் சொற்களால் திட்டியுள்ளார் பின்னர் அவர் மறைத்து வைத்த கத்தி ஒன்றை வெளியில் எடுத்து அதன் மூலம் கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர் அச்சுறுத்தலின் போது அவர் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டுள்ளார் உடனடியாக அவர் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் அவர் நிறைந்த மது போதையில் இருந்ததாகவும் அவரிடம் பயணச்சிட்டை எதும் இல்லை எனவும் அறிய முடிகிறது.

வரும் ஜூன் மாதம் 24 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் எவ்வாறாயினும் இது பயங்கரவாதம் தொடர்புடைய சம்பவம் இல்லை எனவும் கொலை மிரட்டல் பிரிவின் கீழேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிய முடிகிறது.