🇫🇷பிரான்ஸில் நிறுத்தபட்ட தொடருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்…!!!

பரிசில் இருந்து நீஸ் நகருக்கு இரவு நேர தொடருந்து இயக்கப்பட உள்ளது இன்று ஜனவரி 25 ஆம் திகதி முதல் இந்த சேவைக்கான பயணச்சிட்டைகளை விற்பனைக்கு விட்டுள்ளது தொடருந்து நிறுவனமான SNCF வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதல் இந்த தொடருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன.

மூன்றாம் வகுப்பு இருக்கைகள் 19 யூரோக்களுக்கும் இரண்டாம் வகுப்பு இருக்கைகள் 29யூரோக்களுக்கும் முதலாம் வகுப்பு இருக்கைகள் 39 யூரோக்களுக்கும்விற்பனையாகின்றன.

இந்த தொடருந்து சேவைகள் Paris-Austerlitz நிலையத்தில் இருந்து தினமும் இரவு 8.52 மணிக்கு புறப்பட்டு நீஸ் நகருக்கு மறுநாள் காலை 9.55 மணிக்கு வந்தடைகின்றது அதேபோல் நீசில் இருந்து மாலை 6.55 மணிக்கு புறப்படும் தொடருந்து பரிசை மறு நாள் காலை 7.16 மணிக்கு வந்தடையும்.