31 வயதுடைய பெண் வீட்டில் கஞ்சா தோட்டம் வளர்தார்!! காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது..!!!

பெண் ஒருவர் தனது வீட்டில் கஞ்சா தோட்டம் ஒன்றை வளர்த்துள்ளார் Pontarlier (Doubs) எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது பெப்ரவரி 25 ஆம் திகதி (வியாழக்கிழமை) உள்ளூர் காவல்நிலையத்துக்குச் சென்ற 12 வயது சிறுவன் ஒருவன் காவல்துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை தெரிவித்து அவர்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

ஊடங்கிற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் மாலை 5.30 மணி அளவில் அவனது வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அங்கு அவனது வீட்டில் கஞ்சா தோட்டம் ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர்.

குறித்த சிறுவனின் தாயான 31 வயதுடைய பெண்ணே இந்த கஞ்சா தோட்டத்துக்கு உரிமையாளர் என தெரிவிக்கப்பட்டது.தோட்டத்தில் 11 செடிகள் இருந்துள்ளன தாயின் அறைக்குள் 1.38 கிலோ எடைகொண்ட உலர்ந்த கஞ்சா செடிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன சிறுவனின் தாயார் உடனடியாக கைது செய்யப்பட்டார்.