B.B.C தொலைக்காட்சி சேவைகளுக்கு தடை..!!!!!

சீனாவில் வீதிமுறைகளை மீறியதாக பிபிசி தொலைக்காட்சி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இது குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பிபிசியை சீனாவில் தொடர்ந்து ஒளிபரப்ப அனுமதிக்காது என்றும் ஒளிபரப்பிற்கான அதன் புதிய வருடாந்திர விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

சீனாவைப் பற்றிய செய்தி அறிக்கைகள் உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் மற்றும் சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது உள்ளிட்ட ஒளிபரப்பு வழிகாட்டுதல்களை பிபிசி மீறியதாக சீனாவின் திரைப்படம் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிர்வாகம் அறிவித்துள்ளது.