♦️🇫🇷 பிரான்சில் கொரோனா தொற்று அதிகரிப்பு.!! தற்போதைய நிலவரம்.!!!

செவ்வாய்க்கிழமை 3500 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது 4,481 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று வீதம் இரண்டாவது நாளாகவும் 0.9% வீதத்திலேயே உள்ளது 5,794,665 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஆனால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தே வருகின்றது.

7,539 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தீவிர சிகிச்சைப் பிரிவில் 997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் சாவடைந்துள்ளனர் மொத்த சாவு எண்ணிக்கை 111,288 பேராக உயர்ந்துள்ளது.

இவர்களில் 84,815 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.