🇫🇷 பிரான்சில் கொரோனா.! தற்போதைய சாவு, தொற்று நிலவரம்.!!!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பதிவாகியுள்ள தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ.கடந்த 24 மணிநேரத்தில் 10.908 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாளாந்த தொற்று தினமும் அதிகரித்து வரும் நிலையில், தொற்று வீதம் 1.4% இல் இருந்து ஒரே நாளில் 1.6% வீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5.844.249 பேராக உயர்வடைந்துள்ளது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. தற்போது 6.971 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் 899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேவேளை, மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேர் சாவடைந்துள்ளனர். 111.480 பேர் மொத்தமாக சாவடைந்துள்ளனர். இவர்களில் 84.975 பேர் மருத்துவமனையில் சாவடைந்தவர்களாவர்.