🇫🇷🔫பிரான்ஸில் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த துப்பாக்கி குண்டு!

இனம் தெரியாத நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டை அடுத்து, பெண் ஒருவரின் வீட்டுக்குள் குண்டு பாய்ந்துள்ளது. இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு Angers (Maine-et-Loire) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள் வீடு ஒன்றில் பெண் ஒருவர் தனியே வசித்து வந்த நிலையில், இரவு 10 மணி அளவில் திடீரென பாரிய துப்பாக்கி முழக்கம் கேட்டுள்ளது.

துப்பாக்கி சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், மேலும் அதிர்ச்சியட்சியும் முகமாக, துப்பாக்கி குண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளது. அவரது அறைக்குள் இருந்த சோபா இருக்கையில் துப்பாக்கி குண்டு குத்தி நின்றுள்ளது. அதிஷ்டவசமாக இதில் அப்பெண் காயமடையவில்லை. பின்னர் அப்பெண் காவல்துறையினரை அழைத்துள்ளார். அது 22 mm வகை கலிபர் வகை துப்பாக்கி குண்டு என காவல்துறையினர் தெரிவித்தனர்.