🔴 🇫🇷 துப்பாக்கிச்சூடு.!! உதைப்பந்தாட்ட மைதானத்தில்.!!!

உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை அடுத்து ஒருவர் சாவடைந்துள்ளார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மார்செ நகரின் 15 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இங்குள்ள La Martine மைதானத்தில் உள்ளூர் கழகங்களுக்கிடையே H Cup எனும் போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

அதன்போது இரவு 8 மணி அளவில் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் இதனால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இச்சம்பவத்தில் ஒருவர் சாவடைந்துள்ளார்.

பல தடவைகள் அவர் மீது துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மகிழுந்து ஒன்றில் ஏறி தப்பி ஓடியுள்ள நிலையில் சில நிமிடங்களின் பின்னர் குறித்த மகிழுந்து எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.