🇫🇷 பொண்களுக்கு முன்உரிமை வழங்கும் உயர்கல்வி அமைச்சரின் அறிவிப்பு……!!!

பிரான்ஸில் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது புதிய கல்வி ஆண்டான வரும் செப்டம்பர் 2021 ஆம் ஆண்டில் இருந்து இந்த இலவச மதவிடாய் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

பாடசாலை மாணவிகளுக்கும் பல்கலைக்கழக மாணவிகளுக்கும் இந்த சுகாதார பொருட்கள் வழங்கப்பட உள்ளன உயர் கல்வி அமைச்சர் Frédérique Vidal இன்று செவ்வாய்க்கிழமை பெப்ரவரி 23 ஆம் திகதி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதற்காக 5 மில்லியன் யூரோக்கள் 2021 ஆம் ஆண்டில் ஒதுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் Olivier Véran கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.