கடின உழைப்பை காட்டும் பெண்மனி ! ஆச்சரியத்தில் மக்கள்…!

சமூகத்தில் தற்பொழுது ஆண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் சரிக்குச் சமமாக பெண்களும் செய்துவருகின்றமை அன்றாடம் காணக்கூடிய ஒரு விடயமாகிவிட்டது அதனடிப்படையில் வாகனங்கள் திருத்தும் பணி ஒன்றினை செய்துவரும் பெண் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டுவருகின்றது.

மோட்டார் உந்துருளி ஒன்றின் சக்கரத்தைக் கழற்றி அதுதொடர்பான திருத்தவேலையினைச் செய்யும் இந்த பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் அதிகமாக வரவேற்புக் கிடைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதுபோல் தமது குடும்பத்திற்காக கடின வேலைகளைச் செய்தும் உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரிகளும் போற்றப்படவேண்டியவர்களாவர் என்று பலரும் வாழ்த்தியுள்ளனர்.