🇫🇷பிரான்ஸில் உழவு இயந்திரம் ஒன்பது வயது சிறுமியின் உயிரை காவுகொண் டது…!!!

பிரான்ஸில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை Nièvre நகரில் இடம்பெற்றுள்ளது இங்குள்ள Garchizy எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது 2, 3, 6 மற்றும் 9 வயதுடைய சிறுமிகள் தோட்டம் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர் நண்பகல் 12.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒன்பது வயதுடைய சிறுமி தனது தந்தையின் உழவு இயந்தியத்தை இயக்கி அதை செலுத்த தொடங்கியுள்ளார் சில நிமிடங்களில் உழவு இயந்தியம் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு வயது சகோதரியை மோதி தள்ளி பெரிய கிடங்கு ஒன்றை தோண்டி சிக்குண்டு நின்றுள்ளது.

உழவு இயந்திரத்துக்குள் சிக்குண்ட சிறுமி உடல் நசுங்கி சாவடைந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த நான்கு சிறுமிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தங்கைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது உழவு இயந்திரம் சிறியரக quad piloté வாகனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.