🇫🇷 🔴 உள்ளிருப்பு தளர்வு தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல் …!!!!

நாளை ஜூன் 30 ஆம் திகதியுடன் உள்ளிருப்பின் இறுதிக்கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றது இந்த தளர்வுகள் தொடர்பாக நீங்கள் அறிந்துகொள்ளவேண்டியவை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அனைத்து உணவகங்கள் மதுச்சாலை அருந்தகங்களும் 100% வீத வாடிக்கையாளர்களுடன் அனுமதிக்கப்படும் ,திரையரங்கம் இசைக்கூடங்கள், நாடக அரங்குகள் போன்றன முற்றாக திறக்கப்படும், விளையாட்டு கூடங்கள் விளையாட்டு அரங்கங்கள் உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் முற்றாக திறக்கப்படும்,வர்த்தக கண்காட்சிகள் கேளிக்கை நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்படும்

மற்றும் உட்புற இசை நிகழ்ச்சிகள்.படகு பயணங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகின்றது, திருமணங்கள் மத விழாக்கள் போன்றவற்றுக்கு அனுமதி, இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை போன்றவற்றுக்கு நாளை ஜூன் 30 ஆம் திகதி முதல் அனுமதிக்கப்படுகின்றது.

அதேவேளை இரவு விடுதிகள் டிஸ்கொதெ போன்றவற்றிக்கு ஜூலை 9 ஆம் திகதியே அனுமதிக்கப்படும்.

அத்தோடு இறுக்கமான அதிக கூட்டம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணிவது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.