🔴 🔴 🇫🇷 திடீர் திருப்பம் மக்களே….!!! மேலும் இன்று மூன்று மாட்டங்களுக்கு உள்ளிருப்பு அறிவிப்பு…!!!!

நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து மேலும் மூன்று மாவட்டங்களுக்கு உள்ளிருப்பு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன இன்று மாலை ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் Olivier Véran இதனை அறிவித்தார்.

Nièvre, the Aube மற்றும் Rhône ஆகிய மாவட்டங்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் உள்ளிருப்பு நடைமுறைக்கு வருகின்றது.

இந்த மூன்று மாவட்டங்களுக்கும் நான்குவார காலம் உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே 16 மாவட்டங்கள் தற்போது உள்ளிருப்பில் உள்ளன கிட்டத்தட்ட ஒருவாரம் நிறைவடைந்த நிலையில் இந்த புதிய மூன்று மாவட்டங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய மாவட்டங்கள் போல் இந்த மூன்று மாவடங்களிலும் ஆறுபேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவது தடை செய்யப்படுள்ளதுடன் 30 கிலோமீற்றர்களுக்குள் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.