🔴 🇫🇷 உள்ளிருப்பு கட்டுப்பாடு தொடர்பாக உள்துறை அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…..!!!!

சுகாதார ஒழுங்குகளை மீறுவோர் மீது கடுமையான சட்டம் பாயும் என உள்துறை அமைச்சர் Gerald Darmanin எச்சரித்துள்ளார் புதன்கிழமை முதல் உள்ளிருப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அருந்தக மற்றும் உணவகங்களின் முற்றங்கள் திறக்கப்பட்டுள்ளது இது முழுமையான வெற்றி இல்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்திருந்ததார்.

அதை அடுத்து உணவக அருந்தக மேசைகளில் ஆறு பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இரவு 9 மணிக்குப் பின்னர் ஊரடங்கு தொடர்கிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவோரை காவல்துறையினர் கண்காணிப்பார்கள் எனவும் காவல்துறையினருக்கு இந்த அறிவித்தல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் Gerald Darmanin அறிவித்துள்ளார்.

குறிப்பாக இரவு 9 மணிக்குப் பின்னர் புதிய பயண அனுமதி பத்திரத்துடன் பயணிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் தவிர்த்து வெளியேறும் ஏனையோர் மீது காவல்துறையினர் எச்சரிக்கையாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.