தூபியை மீள அமைக்க திருகோணமலை நபர் பொறுப்பு!!!!! முக்கிய செய்தி…!!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு ஆகும் செலவை தானே ஏற்பதாக திருகோணமலையை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

இன்று பல்கலைகழக மாணவர்கள் போராட்டக்களத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,“இன்று காலை திருகோணமலையில் இருந்து ஒருவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார்.

பல்கலைகழக சூழலில் புதிய சூழல் அமைப்பதற்கு ஆகும் செலவை தானே ஏற்பதாக தெரிவித்த நிலையில் அதனை நான் பல்கலைகழக மாணவர்களிடமும் தெரிவித்தள்ளேன் என மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் கூறினார்