மூன்று பாலகர்கள் கிணற்றுக்குள் விழுந்து ! சோகமன நிலை..!!!!

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் தாயின் விபரீத முடிவால் மூன்று பாலகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தாயார் ஒருவர் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த சம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடியில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதில் கிணற்றுக்குள் குதித்த தாயார் கிணற்றின் படிக்கற்களை பிடித்ததினால் உயிர் தப்பிய நிலையில் ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட கிளிநொச்சி வைத்திசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பின்னர் ஏனைய குழந்தைகளை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பொது கிணற்றுக்குள் இருப்பது நேற்று இரவு தெரியவந்தபின்னர் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் ரி. சரவணராஜா அவர்களின் முன்னிலையில் கடற்படையின் உதவியுடன் இரண்டு சிறார்களின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஒன்றரை வயதுடைய கிருபாகரன் டேனேஸ் ஐந்து வயதுடைய கிருபாகரன் அக்சயா எட்டு வயதுடைய கிருபாகரன் கிருத்திகா என்ற சிறார்களே பலியாகியுள்ளனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.