பிரான்சில் “Essonne”மாவட்டத்தில் அனைத்து வணிக நிலையங்களும் திறக்க அனுமதி.!!!

Essonne மாவட்டத்தில் உள்ள ஒரு நகரில் உள்ளிருப்பை மீறி அனைத்து வணிக நிலையங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பரிசின் தென்கிழக்கு பிராந்தியமான பரிசில் இருந்து 20 கி.மீ Yerres எனும் 30.000 பேர் வசிக்கும் நகரில் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நடைமுறைக்கு வந்த உள்ளிருப்பு சட்டத்தை மீறி இந்நகரில் உள்ள அனைத்து கடைகளையும் வணிக நிலையங்களையும் திறக்கும் படி அந்நகரத்தின் நகராட்சியர் Olivier Clodong உத்தரவிட்டுள்ளார் இதனால் பல சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ளது.

அப்பகுதி காவல்துறையினர் இந்த அனுமதிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன் இந்த முடிவுக்கு எதிராக கோரிக்கை ஒன்றும் வைத்துள்ளனர் இதே நகரில் இந்த உள்ளிருப்பை மீறுவது இது முதல் தடவையல்ல கடந்த வருடமும் இந்த கட்டுப்பாட்டை மீறி வணிக நிலையங்கள் திறக்கப்பட்டது அதன் போது நீதிமன்றம் தலையிட்டு உள்ளிருப்பை கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.