🇫🇷 🔴 பிரான்ஸில் வெடிகுண்டால் வணிக வாளாகத்துக்குள் ஏற்பட்ட சலசலப்பு…!!

இன்று செவ்வாய்க்கிழமை காலை Claye-Souilly (Seine-et-Marne) நகரில் உள்ள Les Sentiers வணிக வளாகமே அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அப்பகுதி ஜொந்தாமினருக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்த அச்சுறுத்தலை அடுத்து, காலை 8 மணியில் இருந்து காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் குறித்த வளாகத்துக்குள் தேடுதல் மேற்கொண்டனர்.

அங்கிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அதிகாரிகள் வெடிகுண்டு அகற்றும் குழுவுடன் இணைந்து பணியாற்றினர் நண்பகல் வரை இந்த தேடுதல் நீடித்தது.

பின்னர் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டதும் வளாகம் திறக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.