🇫🇷 நான்கு வருடங்களுக்கு பின் திறக்கும் COLONE DE JUILLET.!!!

நான்கு வருட திருத்தப்பணிகளை முடித்துக்கொண்டு Colonne De Juillet அருங்காட்சியகம் மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது கிட்டத்தட்ட பாழடைந்த நிலையில் இருந்த இந்த அருங்காட்சியகம் 1985 ஆம் ஆண்டு மூடப்பட்டது அன்றில் இருந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் மிக முக்கியமானதொரு திருத்தப்பணி கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்நிலையில் தற்போது திருத்தப்பணிகள் நிறைவடைந்து மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் 18 பேர் கொண்ட குழுவாக இரு தடவைகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் பகல் 2.30 மணிக்கு ஒரு குழுவும் 4.30 மணிக்கு இரண்டாவது குழுவும் அனுமதிக்கப்படுவார்கள் என CMN Centre des monuments nationaux அறிவித்துள்ளது.