🇱🇰 வவுனியாவில் பாரிய விபத்து….. !!! உயிருக்கு போராடும் நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்…!!!!

வவுனியா இலுப்பையடி சந்தி மரக்கறி சந்தைக்கு அருகாமையில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலுப்பையடி சந்தியில் இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஹொரவப்பொத்தானை வீதியூடாக கோழி இறைச்சி சந்தை நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் வீதியில் முன்பாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதுடன் பட்டா ரக வாகனத்தின் சில் பகுதியில் மோட்டார் சைக்கில் சிக்கிக்குன்டது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.