⚫வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களால் நாட்டிற்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் புதிய தகவல்!

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள், நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நிதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த மாதம் 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 55.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆண்டின் முதல் 11 மாதங்களில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் மொத்தமாக 5166.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பி வைத்துள்ளனர்.


இதே காலப்பகுதியில் 2020 ஆம் ஆண்டில் 6291.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணியாகக் கிடைத்திருந்தது. இது முழு ஆண்டு தொகையுடன் ஒப்பிடுகையில் 17.9 சதவீத வீழ்ச்சி எனவும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.