♦️😳வெளிநாடொன்றில் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

தொழில் வாய்ப்புக்காக தென்கொரியாவுக்கு சென்ற இலங்கையர்கள் விசா காலம் முடிவடைந்த நிலையிலும் தொழிலை மேற்கொண்டு வருவதால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறு விசா முடிவடைந்து பணியாற்றுவதால் தென்கொரியாவிலுள்ள பல இலங்கையர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே எச்சரிக்கை விடுத்துள்ளார். விசா இல்லாமல் தென் கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக திருப்பி அழைக்குமாறு தென் கொரிய அரசு இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது. தவறின் இலங்கையர்கள் அதிக எண்ணிக்கையிலானோர் வேலைகளை இழக்கும் அபாயம் உள்ளது என்று ரத்வத்தே தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு விசா காலம் காலாவதியான நிலையில் சுமார் 2,000 தொழிலாளர்கள் இன்னும் அங்கேயே தங்கியுள்ளதாகவும், அவர்கள் விரைவில் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால், அவர்கள் சார்பாக உத்தரவாதத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் மேலும் தெரிவித்தார்.