⚫🇱🇰 மீண்டும் தீவிரவாத பட்டியலில் விடுதலைப்புலிகள்! பிரிட்டன் முடிவை பாராட்டும் இலங்கை!

பிரிட்டனின் வெளியுறவு துறை அமைச்சரான பிரீத்தி படேலுக்கு, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில், இலங்கை மற்றும் பிரிட்டனுக்கு இடையேயான கூட்டுறவு பாராட்டுக்குரியது.

சர்வதேச அளவில் தீவிரவாதத்தை அடக்குவதும், பொதுமக்களுக்கு பயங்கரவாதத்தால் ஏற்படும் பதற்றத்தை போக்குவதிலும் பிரிட்டன் தொடர்ந்து தங்களுடன் சேர்ந்து செயல்படுவதில் உறுதியாக இருக்கிறோம். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக அறிவித்ததைத் தொடர பிரிட்டன் தீர்மானித்திருப்பது, இந்த ஒத்துழைப்பிற்கான ஒரு பகுதியாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.