ஜனாதிபதி மக்ரோன் “LNVALIDES” இற்கு பயணிக்கின்றார்.!!!

இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Invalides இற்கு பயணமாகின்றார் பயங்கரவாதத்தினால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஜனாதிபதி அங்கு செல்கின்றார்.

அவருடன் பிரதமர் Jean Castex, வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian, இராணுவ அமைச்சர் Florence Parly மற்றும் உள்துறை அமைச்சர் Gérald Darmanin ஆகியோருக் பயணிக்கின்றனர் அங்கு அஞ்சலி நிகழ்வை முடித்துக்கொண்டு Dammartin-en-Goële, (Seine-et-Marne) பகுதிக்கும் செல்கின்றனர் கடந்த 2015 ஆம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய Kouachi சகோதர்கள் இங்கு வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

Dammartin இடம் ஒரு காட்டுப்பகுதியாகும் அங்கு Kouachi சகோதர்கள் சார்லி-எப்தோ பத்திரிகை ஊழியர் ஒருவரான Michel Catalano இனை பிணையக்கைதியாக பிடித்துவைத்திருந்தனர் அங்கு பிரெஞ்சு அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர் இன்று ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Michel Catalano இன் மனைவியை நேரில் சந்திப்பார் என அறிய முடிகிறது.