♦️🇫🇷 பிரான்சில் தற்போதைய கொரோனா தொற்று சாவு விபரங்கள்.!!!!

கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் சாவடைந்தவர்களின் விபரங்கள் இதோ கடந்த 24 மணிநேரத்தில் 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொற்று வீதம் தற்போது 0.8% வீதமாக குறைவடைந்துள்ளது.

வியாழக்கிழமை இந்த தொற்று வீதம் 0.9% வீதமாக இருந்தது அதேவேளை இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,766.315 ஆக உயர்வடைந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் 33 பேர் சாவடைந்துள்ளனர்.

மொத்தமாக சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 110,968 ஆக உயர்வடைந்துள்ளது இவர்களின் மருத்துவமனையில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 84,512 பேராக உள்ளது 9,190 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

வியாழக்கிழமை இந்த எண்ணிக்கை 9,392 ஆக இருந்தது.தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,389 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.