பிரான்சில் Thoiry நகரில் விமானம் விபத்துக்குள்ளாகின.! இருவர் பலி.!!!!!

சிறியரக பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் சாவடைந்துள்ளனர் Thoiry Savoie நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு குறித்த விமானம் Annecy நகரில் இருந்து பயணித்துக்கொண்டிருந்த நிலையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது பின்னர் வெடித்து சிதறியுள்ளது அதையடுத்து அதில் பயணித்த இருவரும் சாவடைந்துள்ளனர்.

அங்கிருந்த கிராமத்தினர் தீயணைப்பு படையினருக்கு அழைத்து தகவல் தெரிவித்தனர் பின்னர் தீயணைப்பு படையினர் எரிந்த இருவரது சடலங்களையும் மீட்டனர் விபத்து தொடர்பான விசாரணைகளை brigade de la gendarmerie du transport aérien அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.