இலங்கையில் வீதிப்போக்குவரத்து கடும் சட்டம்,,!!!!

வீதிப் போக்குவரத்து சட்டத்தை கடுமையான நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர் இதன்படி நேற்று முதல் வீதிகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆபத்தான வகையில் வாகனங்களை செலுத்துதல் தேய்ந்த சக்கரங்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பொலிஸார் கண்காணிக்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார் பதுளை பசறையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பலியானதுடன் 30 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இதற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் நாடு பூராகவும் வீதிகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதன்போது வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.