வீதிகளில் சிகரெட் துண்டுகள் வீசப்பட்டிருந்தால் – சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களே பொறுப்பு..!!!!!

வீதிகளில் வீசப்படும் சிகரெட் துண்டுகளுக்கு சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களே பொறுப்பேற்கவேண்டும் என புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட உள்ளது.

பிரான்சில் சிகரெட் துண்டுகள் நீண்டகால தலைவலியாக உள்ளது. Marseille நகரில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை 100.000 சிகரெட் துண்டுகள் வீசப்படுகின்றன. கிட்டத்தட்ட 30 கிலோ எடைகொண்ட சிகரெட் துண்டுகள் நிலத்தில் இருந்து பொறுக்கி எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், வரும் 2023 ஆம் ஆண்டில் இருந்து நிலத்தில் வீசப்படும் சிகரெட் துண்டுகளுக்கு ‘சிகரெட் நிறுவனங்களே’ பொறுப்பேற்க வேண்டும் என புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று விரைவில் பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.