😮🌍உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய விஞ்ஞானிகள்!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்திகொண்டிருக்கும் நிலையில், அந்த வைரஸ் இயற்கையான உருவான வைரஸ் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.கடந்த 2019-ம் ஆண்டில் சீனா நாட்டின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான வூஹானில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டுப்பிடிக்கப்பட்டது.இதையடுத்து, இந்த வைரஸ் கிருமி உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கியது.இன்னும் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் இன்னும் எதிரொலித்து வருகிறது. ஏற்கனவே, சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருக்கும் ஆய்வு மையத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.இதனால், இந்த வைரஸ் எப்படி உருவானது என பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து வரும் நிலையில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அங்கஸ் டக்லீஸ் மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி பிர்ஜர் சோரன்சன் என்கிற ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகள் தொடங்கினர்.

அந்த ஆராய்ச்சியில், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவாக்கப்பட்டது இல்லை என்று ஆய்வாளர்கள் அங்கஸ் டக்லீஸ் மற்றும் பிர்ஜர் சோரன்சன் தெரிவித்துள்ளனர்.மேலும், சீனாவின் வூஹான் மாநிலத்தில் அது உருவாக்கப்பட்டுள்ள அதிக வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைக்க, அது வவ்வாலில் இருந்து கொரோனா வைரஸ் உருவானதாக கூறி சீனா தப்பிக்க முயற்சிப்பதாகவும் ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.